தமிழ் சினிமாவில் 90களில் முக்கியமான நடிகராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த்.இவர் நடிப்பில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் அதிக ஈடுபாடு காட்டி வந்தவர்.இந்த நிலையில் இவரிடம் அடி வாங்கிய நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மன்சூர் அலிகானே ஒரு பேட்எயில் கூறியுள்ளார். அவர் அதில் கூறியதாவது, கேப்டன் பிரபாகரன் படம் தான் மன்சூர் அலிகான் நடித்த முதல் படம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுதான் இல்லை.
சத்யராஜ் நடித்த வேலை கிடைச்சிருச்சு என்ற படத்தில் அடியாள்களில் ஒருவராக நடித்திருப்பாராம் மன்சூர் அலிகான். ஆனால் இதற்கு முன் எந்த படத்திலயும் நடித்ததில்லை என்று சொல்லியே இப்ராஹிம் ராவுத்தரிடம் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
ஒரு நாள் வேலை கிடைச்சிருச்சு படத்தை இப்ராஹிம் ராவுத்தரும் வசனகர்த்தா லியாகத் அலிகானும் சேர்ந்து போய் பார்த்தார்களாம். அப்போதுதான் மன்சூர் அலிகானை படத்தில் பார்த்திருக்கிறார் இப்ராஹிம் ராவுத்தர்.
மறு நாளே கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்க உனக்கு வாய்ப்பில்லை எனக் கூறி விரட்டிவிட்டாராம். அதன் பிறகு லியாகத் அலிகான் வீரபத்ரன் கதாபாத்திரத்திற்கு தேவையான ஆடைகளை அணியவைத்து சில வசனங்களை பேச சொல்லி இப்ராஹிம் ராவுத்தரின் மனதை மாற்றி மன்சூரை நடிக்க வைத்திருக்கிறார்.
மேலும் விஜயகாந்த் மன்சூர் அலிகானுக்கு கழுதை அடி அடிப்பாராம். அப்படி அடி வாங்கி வாங்கியே இடுப்பு வலி வந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!