தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக ஒரு காலகட்டத்தில் திகழ்ந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் தற்போது தே. மு. தி. க கட்ச்சியின் தலைவராகவும் இருந்து வருகின்றார். என்னதான் விஜயகாந்த் இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், அதில் பெரும்பாலும் ஹிட் படங்களாக இருந்தாலும், அவர் ஒரு சிறப்பான நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என்றுதான் ரசிகர்கள் அவரை போற்றி வருகின்றனர்.
மதுரையில் இருந்து சினிமாவில் நடிகராகவேண்டும் என்ற ஆசையோடு வந்த விஜயகாந்த் சந்திக்காத போராட்டங்களே இல்லை. என்னதான் விஜயகாந்த் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தன் சொந்த காலிலேயே நிற்கவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்.
இந்நிலையில் விஜயகாந்தை இன்று நாம் கேப்டன் என அன்போடு அழைத்து வருகின்றோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் தான். அப்படத்திற்கு பிறகு தான் விஜகாந்த்தை அனைவரும் கேப்டன் என அழைத்து வருகின்றனர்.
புலன் விசாரணை தான் செல்வமணியின் முதல் படம். இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்திடம் செல்வமணியை பற்றி ஒரு சிலர் தவராக கூறியுள்ளனர். இதனால் விஜயகாந்த் செல்வமணியிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம். இதைத்தொடர்ந்து புலன் விசாரணை திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பிறகு விஜயகாந்திற்கு திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணத்தில் கலந்துகொள்ள செல்வமணி வந்திருந்தார். திருமண விழாவில் கூட்டம் அலைமோதியதை அடுத்து செல்வமணி தட்டுத்தடுமாறி விஜகாந்த்திடம் சென்றார். அப்போது செல்வமணி கொண்டுவந்த பரிசு கீழே விழுந்துவிட்டது. அப்போது விஜயகாந்த் கைகொடுத்து செல்வமணியை தூக்கிவிட்டார். சார் பரிசு கீழே விழுந்துவிட்டது, எடுத்துட்டு வரேன் என கூறியுள்ளார் செல்வமணி. அதற்கு விஜயகாந்த், நீதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. அந்த பரிசு ஒன்னும் தேவையில்லை என கூறினாராம். இப்படி ஒரு மனிதனை பற்றி தவறாக நினைத்துவிட்டோம் என அவர் மனவருத்தம் அடைந்துள்ளார்.
Listen News!