பிரபல மலையாள இயக்குநரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'காட்பாதர்', 'வியட்நாம் காலனி', 'ஹிட்லர்' உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கினார்.
மேலும் இவர் தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'ப்ரெண்ட்ஸ்' படத்தை இயக்கியிருந்தார். இதன் பின்னர் தமிழில் பிரசன்னா நடித்த 'சாது மிரண்டா', விஜய் நடித்த 'காவலன்', அரவிந்த்சாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்களை இயக்கினார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த சித்திக்கிற்கு நேற்றைய தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டமையைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.
இவரின் இழப்பானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பலரும் அவரின் குடும்பத்தினருக்கு தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜயகாந்த்தும் தனது இரங்கல் செய்தியை தெரிவித்திருக்கின்றார். அந்தவகையில் அவர் கூறுகையில் "இயக்குநர் சித்திக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன், நான் நடித்த எங்கள் அண்ணா படத்தில் சித்திக்குடன் பணியாற்றிய இனிமையான தருணங்களை நினைவு கூர்கின்றேன், அவரின் இறப்பு திரைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!