• Sep 20 2024

இணையத்தில் வைரலாகும் விஜயகாந்தின் புகைப்படம் -ரிஸ்ஃக் எடுத்து தானே நடித்த கேப்டன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் உள்ளார்.தொடர்ந்து தூரத்து இடி முழக்கம், சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள்போன்ற திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி முன்னணி நடிகராக சினிமாவில் கலக்கினார்.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் சேதுபதி ஐபிஎஸ். அப்படத்தின் புகைப்படங்கள் இப்போது சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் விஜயகாந்த் மீனா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் சேதுபதி ஐபிஎஸ் .ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. இத்திரைப்படத்தில் விஜயகாந்தின் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.அதுவும் அவருடைய அறிமுகக் காட்சியில் பிரம்மாண்ட கடிகாரம் ஒன்றில் ஒரு வெடிகுண்டை செயலிழக்க செய்யும் காட்சி பாராட்டுகளை குவித்தது.

இந்நிலையில் இப்போது ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான குகனின் மகளான அருணா இந்தக் கண்காட்சிக்காக விஜயகாந்த் எந்த பாதுகாப்பும் இல்லாமல் துணிச்சலாக அந்தக் கடிகாரத்தில் ஏறும் புகைப்படத்தை தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது உடல் நிலை சரியில்லாமல் உள்ள நிலையில் இவருடைய புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement