• Sep 20 2024

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து... மனைவி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவரே கேப்டன் விஜயகாந்த். தன்னுடைய கம்பீரமான நடிப்பின் வாயிலாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பிலி உருவான வெற்றிப் படங்களோ ஏராளம். 


அந்தவகையில் இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் களமிறங்கினார். இருப்பினும் இதன்பின் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் விஜயகாந்த், மீண்டும் பழையபடி எப்போது கம்பீரமான கேப்டனாக வருவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.


இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய 71ஆவது பிறந்தநாளையிட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சி  தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை விஜயகாந்த் சந்தித்து வரும் நிலையில், இன்று காலை முதலே அங்கு ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் கூடத் தொடங்கி இருக்கின்றனர்.


அந்த சமயத்தில் அங்கு பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா "விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம், அவரின் உடல்நிலை தொடர்பாக யாரும் கவலைப்பட வேண்டாம், அவர் நலமுடன் இருக்கின்றார். உங்கள் விஜயகாந்த் 100வயது வரைக்கும் வாழ்வார்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement