தமிழ் சினிமாவில் அதிகளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட ஒருவரே நடிகர் விஜயகுமார். இவர் அன்று தொடக்கம் இன்றுவரை நடிப்பிலேயே தனது கவனத்தை அதிகளவில் செலுத்தி வருகின்றார்.
மேலும் மூத்த நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என இரு மனைவிகள். அதில் மூத்த மனைவி முத்துக்கண்ணுவுக்கு அனிதா, கவிதா, அருண் என 3 பிள்ளைகள். இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் என விஜயகுமாருக்கு மொத்தம் 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் வனிதாவுடன் ஏற்பட்ட சிறு சிறு குழப்பங்கள், மற்றும் சச்சரவுகள் காரணமாக இவர்கள் யாருமே அவருடன் கதைப்பதில்லை.
விஜயகுமாரின் மகள்கள் நால்வரும் எத்தனை அன்பாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு அடிக்கடி தங்களின் படங்களை பதிவிட்டு வருகிறார்கள். இவ் ஐந்து பிள்ளைகளில் நால்வர் சினிமாவில் நடித்திருக்கின்றார்கள். இதுவரை சினிமாவில் நடிக்காத ஒருவர் என்றால் அது அனிதா விஜயகுமார் தான்.
அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை கடந்த 97 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார் தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அனிதா தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் சமீபத்தில் தன்னுடைய தந்தை விஜயகுமார் மற்றும் உறவுகளுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி இருக்கின்றார்.
அதாவது தமது நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றிருக்கின்றார். அதில் இவரது தந்தை விஜயகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களுடன் இணைந்து அனிதா விஜயகுமார் புகைப்படம் எடுத்திருக்கின்றார். இவரால் வெளியிடப்பட்ட இப்புகைப்படங்கள் யாவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!