தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை விஜயலட்சுமி. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான 'சென்னை 28' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
மேலும் இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கி 3-ம் இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாது அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்குபற்றி டைட்டிலை வென்றதோடு 1கோடி ரூபாயினையும் பரிசாகப் பெற்றிருக்கின்றார்.
இவர் திரையுலக பின்னணியாகக் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தல அஜித்தின் 'காதல் கோட்டை' படத்தை இயக்கிய பிரபல இயக்குநரான அகத்தியனின் மகளாவர். அதுமட்டுமன்றி இவர் 'சென்னை 28' என்ற படத்திலும் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியமையால் தொடர்ந்து 'அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், வனயுத்தம், கற்றது களவு, வெண்ணிலா வீடு, சென்னை 28 இரண்டாம் பாகம்' என பல்வேறு படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
வெள்ளித்திரையில் மட்டுமன்றி சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான இவர் தனது காதலனான இயக்குநர் பெரோஸை கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக நிலன் என்கிற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
நடிகை விஜயலட்சுமி படங்களில் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்தவகையில் தற்போது நீல நிறத்தில் கிளாமர் உடை ஒன்றினை அணிந்து கடற்கரையில் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.
அப்புகைப்படங்களிற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருவதோடு, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆக்கி வருகின்றனர்.
பிற செய்திகள்
- போதைக்கு அடிமையான பெண்ணாக மாறிய பிரபல நடிகை… பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ பதிவு…! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- ஆலியா பட்டிற்கு அடுத்த படியாக அதிக சம்பளம் வாங்கும் நயன்….அதுவும் இவ்வளவா..? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!
- உதயநிதி ஸ்டாலின் குடும்பத்திலும் சொத்துப் பிரச்சினை வந்ததா..? உண்மையை உளறிய மனைவி கிருத்திகா..!
- இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையை படைத்த யோகி பாபு… நல்லா தான் யோகம் அடிக்குது போல..!
- விஜய்யின் தந்தையிடம் அடி வாங்கிய இயக்குநர் ஷங்கர்…காரணம் என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!