• Nov 14 2024

பாட்டி கொடுத்த ஐடியாவில் தலைகீழான விஜயா வீடு.. நொண்டியான மனோஜ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில்  இன்றைய எபிசோட்டில், பாட்டி வீட்டில் உள்ள எல்லாரையும் அழைத்து மொட்டை மாடியில் ரூம் கட்ட போவதாக சொல்ல, அதற்கு மனோஜ் யாருடைய காசில் கட்டப் போறாங்க  என்று கேட்கிறார். உடனே முத்து உங்கிட்ட காசு கேட்க மாட்டாங்க என்று சொல்லுகிறார். அண்ணாமலை யாரும் காசு தர வேண்டாம் நான் என் பென்ஷன் காசில் கட்டுகிறேன் என சொல்ல, நீ உன் காச எடுக்க வேண்டாம். உன்கிட்ட காசு இருந்தா தான் உன்னை மதிப்பாங்க என்று முத்து சொல்லுகிறார் பாட்டியும் அதுதான் சரி என்று சொல்லுகிறார்.

அதற்கு பிறகு பாட்டி ஒரு ஐடியா கொடுக்கிறார். அதாவது ஒரு வாரம் ஒரு ஜோடி ஹாலில் படுக்க வேண்டும். இருக்கிற இரண்டு ரூமையும் மாறி மாறி ஷேர் பண்ணுங்கள் என்று சொல்ல, உடனே விஜயா ரோகிணியும் ஸ்ருதியும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் அவங்க எப்படி வெளிய தூங்குவாங்க என்று கேட்க, மறு வீட்டுக்கு வந்தா எல்லா மருமகள்களையும் ஒன்னா தான் பாக்கணும் எல்லாத்தையும் பழக வேண்டும் என்று சொல்லுகிறார்.


அதற்கு பிறகு மீனா பாட்டியிடம் எங்களால் யாருக்கும் கஷ்டம் வேண்டாம் என்று சொல்ல, நீ சும்மா இரு. இப்படியே இருந்தா நீ இப்படியே இருக்க வேண்டியது தான். பிறகு எப்படி வம்சம் விருத்தியாகும். புருஷன் பொண்டாட்டி ஒன்னா இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும் என்று சொல்லி அனுப்புகிறார்.

அதன் பிறகு மனோஜ் தனது பார்க் நண்பரை கூட்டிக்கொண்டு தான் வாங்க இருக்கும் கடைக்கு சென்று காட்டுகிறார். ரோகினியும் வித்தியாவை அழைத்துக் கொண்டு கடையை காட்டுகிறார். அங்கு மனோஜ் ஓடிப்போய் முதலாளியின் கதிரையில் இருக்க, அவரது பார்க் நண்பர் இன்னும் கடை கைமாறல என்று நக்கல் அடிக்கவும், ரோகிணியின் முகம் மாறுகிறது. அதன் பிறகு கடைக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க?  பெரிய நடிகையா கூப்பிட்டு கடையை திறங்க. அப்பத்தான் உங்க கடைக்கு விளம்பரம் கிடைக்கும் என்று  சொல்லுகிறார். 

அதன் பிறகு ரோகிணியும் மனோஜுன் ரூமில் இருந்து வெளியே வராததால் மீனா ஹாலில்  பாய் போட்டு படுக்கச் செல்ல, அங்கு வந்த ஸ்ருதி, ரவி நீங்க தானே இந்த முறை ரூமுக்குள்ள படுக்கணும் என்று சொல்கிறார். பிறகு முத்து வந்து மனோஜ்ஜை கூப்பிட்டு கதவை தட்ட, அவர்கள் வெளியே வருகிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement