• Sep 21 2024

அனன்யா பாண்டேவின் மடியில் படுத்து கொண்டே லோக்கல் ரயிலில் பயணம் செய்த விஜய்தேவர் கொண்டா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தேவர் கொண்டா மற்றும் அனன்யா பாண்டே நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் லைகர் . இந்தப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார் .Puri connects மற்றும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இனைந்து இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.

பிரபல உலக குத்துசண்டை வீரர் மைக் டைசனும் இப்படத்தில் நடித்துள்ளார்.அதே போல ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளதோடு படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழு முன்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்து படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் விஜய் தேவரகொண்டா & அனன்யா பாண்டே பங்கெடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்களை அனன்யா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ரயில் பயணத்தில் அனன்யா பாண்டேவின் மடியில் படுத்து விஜய் தேவரகொண்டா சிறிது நேரம் பயணம் செய்தார்.இருவரும் டெனிம் ஜீன்ஸ் அணிந்து காட்சியளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement