தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் விஜய். கல்லூரி மாணவனாக இப்படத்தில் நடித்திருந்தாலும் இப்படத்தில் இவரது தோற்றம் ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
எண்ணெய் வழிந்த முகத்துடன் இவரெல்லாம் நடிக்க வந்துவிட்டார் என்ற விமர்சனங்களே இவருக்கு ஆரம்பத்தில் அதிகமாக இருந்தது. ஆனால் தன்மீது வைக்கப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களையே தன்னுடைய பாசிட்டிவ்வாக மாற்றிக் காட்டினார் விஜய். தற்பொழுது இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவருடைய கெரியரில் நல்ல திருப்பங்களை ஆரம்பத்தில் பெற்றுக் கொடுத்த படங்களாக பூவே உனக்காக, லவ் டுடே உள்ளிட்டவற்றைக் கூறலாம்.இதனைத் தொடர்ந்து மாஸ் ஹீரோவாக தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தினார்.தற்போது ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாக காணப்படுகிறார்.
சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தபோதிலும் வசூலில் சொதப்பவில்லை.இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இணையவுள்ளார் விஜய்.
இதனிடையே வரும் 4ம் தேதி திரையுலகில் இவர் தனது 30 ஆண்டு கொண்டாட்டத்தை மேற்கொள்ளவுள்ளார். இதையொட்டி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இதையொட்டி சிறப்பு டிபியை உருவாக்கியுள்ளனர். இதில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் விஜய்யை காண முடிகிறது. 30 ஆண்டுகள் கொண்டாட்டத்தையொட்டி #30yearsofVijayism, #30yrsofvijayismspecialDP போன்ற ஹாஷ்டேக்குகள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளன.
இதனிடையே இந்த ஹாஷ்டேக்கை ஷேர் செய்து பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ராஷ்மிகா மந்தனா, சிபி சத்யராஜ், பிரேம்ஜி, மாஸ்டர் மகேந்திரன், பாடகர் கிரிஷ், நடிகை ஆர்த்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!