தளபதி விஜய் தற்பொழுது தனது 66வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகின்றார். இப்படத்திற்கு வாரிசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்டிமென்ட், ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பேனரில் தில் ராஜு தயாரித்து வருகின்றார்.
அத்தோடு இப்படத்திற்கு தமன் இசையமைப்பதோடு ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, பிரபு, சங்கீதா கிருஷ், சம்யுக்தா கிருஷ், ஸ்ரீகாந்த், சாம் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஹீரோ மகேஷ்பாபு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்ட இப்படத்திலிருந்து மூன்று போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது. முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷுட்டிங் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தமன் வித்தியாசமான சர்ப்ரைஸ் ஒன்று வைத்திருக்கின்றாராம்.
அதாவது இப்படத்திற்கு தற்போது பஃக்ரவுண்ட் மியூசிக் அமைத்து வருகிறாராம் மாஸாக இருப்பதற்காக விஜய் நடித்த சூப்பர்ஹிட் பாடலான யூத் படத்தில் வரும் ஆல்தோட்ட பூபதி பாட்டை இந்த படத்தில் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தி இருக்கிறாராம். இதனால் அந்த பாடலை எப்போ ரிலீஸ் பண்ணுவீங்க என இப்போதே கேட்க ஆரம்பித்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஆன்லைன் சூதாட்டத்தை நீங்கள் ஊக்குவிக்கலாமா?-விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய சரத்குமார்
- நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாதித்த பணத்தை இங்கு தான் முதலீடு செய்துள்ளாரா?
- நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷாருக்கான்
- அந்தப் பையன் ஒல்லியாக இருக்கான் உங்களுக்குள்ள சரிப்பட்டு வராது….உண்மையை உளறிய நடிகை சோனியா அகர்வால்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!