• Sep 20 2024

தனது தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றும் விஜய்யின் மகள்- ஹீரோயின் போல சூப்பராக இருக்கின்றாரே?

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் நடிப்பில் லியோ என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப் படத்தின் ஷுட்டிங்கிற்காக படக்குழு தனி விமானத்தில் சென்ற புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி இருந்தது.


தொடர்ந்து காஷ்மீரில் இருந்து விஜய் சென்னை திரும்பிய போது எடுத்த வீடியோவும் வெளியாகியிருந்தது. இப்படியான ஒரு நிலையில் இப்படத்தில் மிஷ்கின் கௌதம் மேனன் போன்ற இயக்குநர்களும் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.


நடிப்பைப் போல விஜய் சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். தனது ரசிகர் மன்றத்தின் ஊடாக ஏராளமான உதவிகளையும் செய்து வருகின்றார். இருப்பினும் தனது குடும்ப விவகாரத்தினால் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.


இப்படியான நிலையில் விஜய்யின் மகான திவ்யாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. திவ்யா சிறுவயதில் இருந்த போது எடுத்த புகைப்படங்கள் அதிகமாக இணையத்தில் வெளியாகி வரும். இப்படியான நிலையில் தற்பொழுது வெளியாகியிருக்கும் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவில் வளர்ந்து இருக்கிறார் என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement