நடிகர் விஜய் தற்போது பரபரப்பாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் கட்சியின் கொடி கலர் அடர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் இந்த கட்சிப் பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவரது கட்சி தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தான் 2024 எங்கள் இலக்கு கிடையாது, நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் நிற்க மாட்டோம், 2026 தேர்தலில் நிற்போம், ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு தரமாட்டோம் எனக்கூறி அவர் கட்சிக்கு வருவதை உறுதி செய்து விட்டார்.
மேலும், எங்களின் அரசியல் பயணம் எதை நோக்கி செல்லும் என்பதை சொல்வோம். அது அரசியல் மாற்றத்திற்காக கட்சியாக இருக்கும். வெறும் ஆட்சி மாற்றத்திற்கான கட்சியாக இருக்காது. ஊழலுக்கு எதிரான கட்சி என்றும் சொல்ல மாட்டோம். எங்களுடைய கொள்கைககள் மக்களுக்கு விளக்கமாக இருக்கும்.
மேலும், ஜாதி, மத, இன வேறுபாடு பார்க்காமல் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கும் கட்சியாக இது இருக்கும் என்று அவரின் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
அதேவேளை, விஜயகாந்த் மீது விஜய் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதன் வெளிப்படையாகத்தான் லியோ வெற்றி விழாவில் கமல், ரஜினி பெயர்களை சொல்வதற்கு முன்பாக விஜயகாந்தின் பெயரை சொல்லி இருக்கின்றார்.
இது மட்டுமல்லாமல் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது சங்கத்திற்காக தனது தொடர் ஆதரவை விஜய் கொடுத்து வந்தார்.
ஆனாலும் விஜயகாந்தின் இறப்பு, விஜயை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் கட்சி பற்றி அறிவித்த விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் முதல் பயணமாக, சில தலைவர்களின் சமாதியில் ஆசீர்வாதம் பெற இருக்கின்றார். அதில் முக்கியமாக விஜயகாந்த் சமாதியில் சில உறுதிமொழிகள் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Listen News!