நடிகர் விஜய்யின் மாமாவான தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ என்பவருக்கு சினேகா என்கிற மகள் இருக்கிறார். இவரும் தமிழில் 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருக்கும் நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளிக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
சினேகா பிரிட்டோவை திருமணம் செய்துகொண்டதை தொடர்ந்து விஜய்யின் குடும்பத்தில் ஒருவராக இணைந்துவிட்ட ஆகாஷ் முரளி தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கின்றார்.
முரளியின் மகனான அதர்வா சினிமாவில் ஏற்கெனவே ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பதை தொடர்ந்து தற்போது ஆகாஷ் முரளியும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
அந்தவகையில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தில் அதிதி ஷங்கருக்கு ஜோடியாக இவர் நடிக்கவுள்ளாராம். இதனை அறிந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
Listen News!