தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். சுமார் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர் நடிப்பில் தற்போது 'வாரிசு' படம் தயாராகி இருக்கின்றது. இந்நிலையில் படத்தைப் பற்றிய பேச்சுகள் தான் இப்போது அதிகமாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
மேலும் எதிர்வரும் பொங்கல் தினத்தன்று ஸ்பெஷலாக இப்படம் வெளியாக உள்ளதோடு மிகப்பெரிய அளவிலான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன.
அந்தவகையில் ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மா பாடல் என்ற 3பாடல்கள் வெளியாகிவிட்டன. அதுமட்டுமல்லாது எதிர்வரும் டிசம்பர் 24-ஆம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் இன்னொரு பாடல் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் பாடியதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்தப் பாடல் யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு இணையாக கேட்டவுடன் ஆட்டம் போட வைக்கும் அளவிற்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது ஆல்தோட்ட பூபதி பாடலை சங்கர் மகாதேவன் தான் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!