அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ரசிகர்கள் இவரை AK என்றும் அழைக்கிறார்கள். மேலும் கூகுளில் அதிகம் தேடப்படும் தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார். மேலும் அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் ஆவார்.
மேலும் இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். மேலும் இவர் தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார் அஜித் குமார்.
இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. மேலும் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அஜித் பைக்கில் உலகம் சுற்றி வருகிறார்.
சமீபத்தில் பைக்கில் இருந்து எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வந்தது. தற்போது விஜய்யின் தந்தையான SAC இமாலயாவுக்கு சென்றுள்ளார். அவர் பைக்கில் அசத்தலான லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் அஜித்தை போல இவர் பைக்கில் உலகம் சுற்ற இருக்கிறாரா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Listen News!