• Sep 20 2024

பிரபல நடிகையின் தயாரிப்பில்... சீரியலில் களமிறங்கவுள்ள விஜய்யின் தந்தை.. அதுவும் எந்த சேனலில் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு ஒரு முக்கியமான இயக்குநராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அந்தவகையில் இவர் சட்டம் சம்பந்தமாகவும், அதில் உள்ள ஓட்டைகளை சுட்டிக்காட்டும் திரைப்படங்களுக்கும் பெயர் போனவராக இருக்கின்றார். 


இவ்வாறு பல திரைப்படங்களை தமிழ்த் திரையுலகிற்குத் தந்த அவரின் 71-ஆவது படைப்பாக இவர் இயக்கிய 'நான் கடவுள் இல்லை' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. பிரபல நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சி ஒரு இயக்குநராக மட்டுமின்றில் பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கின்றார்.


இந்நிலையில் தற்போது விரைவில் விஜய் டிவியில் புதிதாக வரவிருக்கும் சீரியல் ஒன்றில் எஸ்.ஏ. சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது பிரபல நடிகை ராதிகாவின் தயாரிப்பில் இந்த சீரியலானது உருவாக இருக்கின்றது. 


இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எவ்வாறாயினும் விஜய்யின் தந்தை சீரியலில் களமிறங்க இருக்கின்றார் என்ற தகவலானது தளபதி ரசிகர்களுக்கும் பலத்த உற்சாகத்தைக் கொடுத்திருக்கின்றது.

Advertisement

Advertisement