தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தளபதி விஜய். இவர் திரைத்துறையை பின்னணியாக கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் வந்திருந்தாலும் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டது தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமும், நடனத்தின் மூலமாகவும் தான். இவர் நடிகர் மட்டுமல்லாது ஒரு பாடகரும் கூட.
இவ்வாறாக தன்னுடைய பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வருகின்ற விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவான 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகாவும் மற்றும் ஏகப்பட்ட முக்கிய நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தினுடைய படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 67 ஆவது படமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமையவிருக்கும் 'தளபதி 67' இல் நடிக்க இருக்கிறார். ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் அப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றி வரும் இயக்குநர் ரத்னகுமார், இயக்குநர் லோகேஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு மறைமுகமாக 67 அப்டேட்டை கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இப்படம் குறித்து மற்றுமோர் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அந்தவகையில் 'தளபதி 67' படத்தின் OTT உரிமத்தை Netflix நிறுவனம் வாங்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைக் கேள்வி பட்ட ரசிகர்கள் "மரத்தை நடுவதற்கு முன்னர் கனியை ருசிபார்ப்பதற்கு netflik ஆசைபடுகின்றனர்" எனக்கூறி கேலி செய்து வருகின்றனர்.
Listen News!