விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க தமன் இசையமைத்து வருகின்றார். மேலும் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
எனினும் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது என அறிவித்து இருந்தார்கள்.இதையடுத்து சமீபத்தில் தமனின் இசையில் விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் வெளியாகி வைரல் ஹிட்டானது.
இவ்வாறுஇருக்கையில் பொங்கலுக்கு வாரிசு படத்திற்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகவுள்ளது. இதன் காரணமாக வாரிசு படத்தின் வசூல் பாதிக்கும் அபாயம் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசிவந்தனர்.
மேலும் இதைத்தொடர்ந்து தற்போது வாரிசு படத்திற்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது பொங்கலுக்கு வெளியாகும் படங்களில் தெலுங்கு படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை வழங்கப்படுமென தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாம் என கூறப்படுகின்றது.
இதன் காரணமாக வாரிசு படத்துடன் வெளியாகும் தெலுங்கு படங்களுக்கே அங்கு திரையரங்குகள் கிடைக்கும் என்றும், மிகக்குறைவான திரையரங்கங்களே வாரிசு படத்திற்கு கிடைக்கும் என்றும் தெரிகின்றது.
அத்தோடு என்னதான் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தெலுங்கு திரையுலகை சார்ந்தவர்கள் என்றாலும் வாரிசு ஓரு தமிழ் படம் என்பதால் தெலுங்கு திரையுலகில் முன்னுரிமை தரமாட்டாது. எனவே வாரிசு படத்தின் வெளியீட்டில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!