தளபதி விஜய் ஜூன் 17ஆம் தேதி, தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில், தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 1339 மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்திருந்தார்.. அதேபோல் விஜய் இந்த விழாவில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசியிருந்தார்.
குறிப்பாக விஜய் பெரியார், அம்பேத்கர், காமராஜர், ஆகியோரை பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறியதும், ஓட்டு போட பணம் வாங்க கூடாது என்கிற விழிப்புணரவை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு, பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களின் வரவேற்பை தெரிவித்திருந்தனர்.
இது ஒரு புறம் இருக்க லியோ படத்தில் இடம் பெற்ற நா ரெடி தான் என்னும் பாடல் வெளியாகி பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகின்றது. குறிப்பாக இதில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்டி இருப்பதால் உச்ச நடிகர் இப்படியொரு செயலில் ஈடுபடலாமா என பல அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க விஜய் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தன்னுடைய கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த ஜுன் 22 அன்று எனது பிறந்த நாளில் மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களன் ஊடாக அறிந்தேன்.எங்களது சிறப்பான செயற்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் என்றும் அவர் எழுதியுள்ளார்.
Listen News!