• Sep 20 2024

படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற விஜய்யின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்- தளபதி எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். அத்தோடு இப்படத்தில் நடிகர் ஷாம் சரத்குமார் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பிடிப்பிற்காக விஜய் தற்போது ஹைதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து காரில் விஜய் வரும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய்யின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement