ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுமே தற்போது எதிர்பார்த்து இருப்பது நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தினைத்தான். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத் , அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படமானது அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு லியோ படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வந்திருந்தன. ஆனாலும் ஒரு சில காரணங்களால் அது நடைபெற முடியாமல் போனது.
இதனையடுத்து லியோ படத்தின் ட்ரெய்லர் ரோகிணி திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது. அங்கு குவிருந்த ரசிகர்கள் தியேட்டரின் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்தினர். அத்தோடு லியோ படத்தில் விஜய் ஆபாச வார்த்தை பேசிய காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆபாச வார்த்தையை நீக்க கோரி லியோ படக்குழுவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இப்படியான ஒரு சூழலில் லியோ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.
அந்த வகையில் குறித்த நோட்டீஸில் திரையரங்குகளில் திரைப்படத்தையோ, டிரெய்லரையோ அல்லது விளம்பரங்களையோ வெளியிடுவதற்கு முன்பு சென்சார் போர்டின் தணிக்கை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
ஆனால் லியோ டிரெய்லர் தணிக்கை சான்றிதழ் பெற்றிராத நிலையில் அதை எப்படி திரையில் வெளியிட்டீர்கள் என்ற கேள்வியும் அந்த நோட்டீஸின் வாயிலாக எழுப்பப்பட்டுள்ளது. அத்தோடு தணிக்கை சான்றிதழ் இல்லாமல் டிரெய்லரை வெளியிட்டது கிரிமினல் அஃபென்ஸ்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!