• Sep 21 2024

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விஜயின் ‘லியோ’.. உற்சாகத்தில் ரசிகர்கள்! தளபதின்னா சும்மாவா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’ காஷ்மீரில் ஒரு மாத காலமாக படமாக்கப் பட்டு வரும் லியோ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. 

இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத். அர்ஜுன், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 

முன்னதாக படத்தின் டைட்டில்  வெளியீடு வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது லியோ திரைப்படம்.நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை தூண்டும் அளவு காஷ்மீரில் இருந்து அப்டேட்டுகள் வந்து கொண்டிருந்த இந்த நேரத்தில் படத்தின் இணை தயாரிப்பாளார் ஜெகதீஷ் பழனிசாமி அவர்கள் 2023 கிரிக்கெட் உலக கோப்பையின் போது லியோ படத்திற்கான விளம்பரம் தொடங்கும் என்று சூசகமாக தெரிவித்துள்ளனர். 

 2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த முறை இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நடைபெறவுள்ளது. மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 அன்று ஆயுத பூஜை வெளியீடாக வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

 வரும் 2023 உலக கோப்பை போட்டி இந்திய முழுவதும் பல நகரங்களில் நடைபெறவுள்ளது மேலும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படமும் பான் இந்திய அளவு வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் விளம்பர பணியும் மிகப்பெரிய அளவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement