தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் நடிகர் விஜய் 'வாரிசு;படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது .
இந்த திரைப்படத்திற்கு “லியோ” என்று பெயரிடப்பட்டு அதன் அதிகாரப்பூர்வ முதல் ப்ரோமோவும் நேற்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் புதிரான காட்சிகளும், நடிகர் விஜய் புதிய அவதாரத்திலும் இருக்கிறார்.
இந்த படத்தின் தலைப்பு மற்றும் ப்ரோமோவுடன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதாவது, தளபதி விஜய்யின் ‘LEO அக்டோபர் 19, 2023 வியாழன் அன்று வெளியாகிறது, ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 23 திங்கள் மற்றும் 24 செவ்வாய் கிழமை அரசு விடுமுறை ஆகும்.
இதனால், அக்டோபர் 19 ரிலீஸ் செய்து தொடர்ந்து ஆறு நாட்கள் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெரும், இது விஜய்க்கு மிகப்பெரிய ரிலீஸாக அமையும். இதனை வைத்து பார்க்கும்பொழுது, படக்குழு விவரமாகத்தான் ரிலீஸ் தேதியை குறித்துள்ளது, இதனால் ஒரு மிக்பெரிய வசூலை இப்படம் ஈட்டும் என்பதில் சந்தேகமே இல்லை என்பது தெளிவாகிறது.
ஏற்கனவே, விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தை கைதி மற்றும் விக்ரம் படங்களுடன் இணைத்து லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும் இருக்கும் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தனர். தற்போது, நேற்று வெளியான லியோ ப்ரோமோ அதற்கான சான்று என்றே சொல்லலாம். ஏனென்றால், கமலின் விக்ரம் பட ப்ரோமோவில் வரும் காட்சிகளுடன் லியோ ப்ரோமோ ஒத்து போகிறது.
அது மட்டும் இல்லாமல், ப்ரோமோ வீடியோவில் விக்ரம் திரைப்படத்தில் கடைசி 5 நிமிடம் வந்து பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த நடிகர் சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரம் லியோ படத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அது என்னன்னு கேக்கீங்களா.? லியோ ப்ரோமோவில் ரோலக்ஸ் காரில் வரும் கட்சிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது.
Listen News!