விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம், LCU கான்செப்ட்டில் தான் இருக்கும் என்பதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.
இதனிடையே விக்ரம் படத்தின் ப்ரீக்வெல்லாக லியோ உருவாகி வருவதாக தெரிகிறது. லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இவ்வாறுஇருக்கையில் லியோ சூட்டிங் காஷ்மீரில் நடந்த போது கெளதம் மேனனும் அங்கு நடித்திருந்தார்.அவ்வாறு நடிக்க போன இடத்தில் துருவ நட்சத்திரம் டீமையும் அங்கு கூட்டிட்டு போனாராம் எனக் கூறப்படுகின்றது.
ஆனால் அங்கு துருவநட்சத்திரத்தில் நடிக்கும் விக்ரம் ஆகிய முக்கிய பிரபலங்கள் செல்லவில்லையாம்.துணை இயக்குநர்கள் மற்றும் காமரா மான்கள் தான் சென்றார்கள்.போனவர்கள் அங்கு சில இடங்களை சூட் பண்ணினார்கள் என்று கூறப்படுகின்றது.
Listen News!