நடிகர் விஜய் லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கின்றார். இப்படத்தைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதாவது அவர் அரசியலில் இணையப் போவதால் தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக தெரிகிறது.
தனது அரசியல் எண்ட்ரி குறித்து விஜய் இதுவரை வாய்த்திறக்கவில்லை என்றாலும், அவரது நகர்வுகள் ஒவ்வொன்றும் அதனை ஆணித்தரமாக அறிவிக்கும் வகையில் உள்ளது. அந்தவகையில் கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்தி இருந்தார்.
அந்த நிகழ்வில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்து இருந்தார். இதனையடுத்து பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் விஜய் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
அரசியல் பயணத்திற்கான இவரின் திடீர் வருகை ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கின்ற இந்த நேரத்தில் டிவிட்டர் பக்கத்தில் கடந்த ஜூன் மாதம் அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்களின் உடைய டாப் 10 பட்டியலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலின் வரிசையில் இந்தியப் பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதோ அந்தப் பட்டியல்
1. பிரதமர் மோடி
2. விராட் கோலி
3. விஜய்
4. ஃபுக்ரா இன்சான்
5. சுனில் சேத்ரி
6. இந்திய கால்பந்து அணி
7. ஷாருக்கான்
8. அல்லு அர்ஜுன்
9. ரோகித் சர்மா
10. ராகுல் காந்தி
Listen News!