தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக பல ஆண்டுகளாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதியின் ஒரே மகன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய், இன்று உச்சநடிகராக உயர்ந்தமைக்கு காரணம் அவரது தந்தை தான்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜய்க்கும் அவரது அப்பாவான இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகருக்குமான உறவு சுமூகமாக இல்லை. அதாவது தனது பெற்றோரை பிரிந்து தனது மனைவி, மகன், மகள் என தனிக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றார் விஜய்.
இதனைத் தொடர்ந்து தனது மகன் தன்னுடன் சரியாக பேசுவதில்லை, தன்னையும் தனது மனைவியையும் சந்திப்பதில்லை என சினிமா வட்டாரத்தில் தனக்கு நெருக்கமானவர்களிடம் பலவாறாகப் புலம்பி வருகிறார் எஸ்ஏ சந்திரசேகர்.
மேலும் விஜய் இவ்வாறு தனது பெற்றோரை விட்டு விலகி இருக்க அவரது மனைவியான சங்கீதாதான் காரணம் என தகவல் ஒன்று ஏற்கெனவே பரவியது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது அப்பாவை வெறுத்து ஒதுக்குவதற்கான காரணம் என ஒரு தகவல் இணையத்தில் தற்போது ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரும் நடிகர் ரஜினிகாந்தும் ஆரம்பத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள்.
அந்தவகையில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'நான் சிவப்பு மனிதன்' என்ற படம் செம்ம ஹிட்டானது. அதன் பிறகுதான் இருவருக்கும் இடையிலான உறவில் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அத்தோடு பிரபல இயக்குநராக இருந்த போதும் ரஜினிகாந்தை பொது வெளியில் பார்த்தால் வயது வித்தியாசம் பார்க்காமல் ஓடிப்போய் அவருடைய காலில் விழுந்து விடுவாரம் எஸ்ஏ சந்திரசேகர். தமிழ் சினிமாவில் தான் டாப் ஹீரோவாக உள்ள நிலையில் தனது அப்பா இப்படி வயது வித்தியாசம் இல்லாமல் ரஜினியின் காலில் விழுவது விஜய்க்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம்.
இதனால்தான் தனது அப்பாவை கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க தொடங்கிவிட்டாராம் விஜய். அதேநேரத்தில் எஸ்ஏ சந்திரசேகர் ரஜினிகாந்தின் காலில் விழுவதற்கான காரணம் என்னவெனில் ஆரம்பத்தில் ரொம்பவே கோபக்காரராக இருந்த எஸ்ஏ சந்திரசேகரை சாந்தப்படுத்தி, அவருடைய கோபத்தை குறைக்க வைத்தது ரஜினிகாந்த்தானாம். இதன்காரணமாகதான் எஸ்ஏ சந்திரசேகர் ரஜினிகாந்தை பார்க்கும் போதெல்லாம் அவருடைய காலில் உடனே விழுந்து வருகிறாராம்.
Listen News!