விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது . மேலும் இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கின்றார். எனவே இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கின்றார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.
ஆரம்பத்தில் 'தளபதி 68' இல் த்ரிஷா தான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதன் பின்னர் பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது மற்றுமோர் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ஜோதிகா தான் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்த பேச்சு வார்த்தை நடக்கும் எனவும் கூறப்படுகின்றது.
அந்தவகையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் தளபதி 68 இந்த மூலமாக விஜய்-ஜோதிகா இணைவது மென்மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
Listen News!