• Nov 10 2024

"கிளைமாக்ஸ்ல விஜய் நடிப்பு ரொம்ப எமோஷனலா இருக்கும்".. பிரபல வாரிசு பட நடிகை

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் பிரத்தியோக ஊடகம் ஒன்றிற்கு  வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகை நந்தினி ராய் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். 

அதாவது அதில், "தளபதி விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தில் எதை எதிர்பார்க்கலாம். மாஸ் காட்சிகளையா? அல்லது சண்டைக் காட்சிகளையா?" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த நந்தினி ராய், "படத்தில் விஜய் அற்புதமாக நடித்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்கள் விஜய் நடிப்பில் எமோஷனல் ஆகி விடுவார்கள். அத்தோடு எனக்கு வாரிசு படத்தின் ஆக்சன் காட்சிகள் ரொம்ப பிடிக்கும். படத்தில் நிறைய ஆக்சன் காட்சிகளை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்." என நந்தினி ராய் பதில் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement