• Nov 19 2024

சினிமால என்ன புடுங்க போறான்னு திட்டிய லோகேஷ்... கண் அசைவில் வெளியே அனுப்பிய விஜய்... கவிதை கோபால் எமோஷனல் பேட்டி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

 "கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான்" என்ற கவிதை வீடியோ மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கவிதை கோபால். கவிதை மட்டும் இல்லாது நடிக்கிறதுலயும் இவருக்கு அலாதி பிரியம் உண்டு. அந்தவகையில் 'மாஸ்டர், நட்பே துணை, துணிவு, வாரிசு போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவராக இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் சமீபத்தில் கவிதை கோபாலை பொது மேடையில் நிக்க வைத்து அவரைப் பேச விடாமல் கீழே இறக்கியது போன்ற ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. இதனையடுத்து இவர் பங்கு கொண்ட ஒரு பேட்டியில் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார் கவிதை கோபால்.

அந்தவகையில் அவர் கூறுகையில் "ஒரு படத்தினுடைய ஆடியோ லாஞ்சிற்காக என்னை மேடையில் பேசுமாறு கூப்பிட்டு அழைத்திருந்தார் அந்த படத்தின் இயக்குநர். நான் பேசும் போது இயக்குநர் பாக்யராஜ் எல்லாருமே கீழே உட்க்கார்ந்திட்டுதான் இருந்தாங்க. அவங்க எல்லாருமே மேல வந்ததும் நான் பேசுறேன் என்றேன், அதுமட்டுமல்லாது நான் கடைசியாய்ப் பேசுறேன் எனவும் கூறினேன்.


பின்னர் நானும் மேடையில் ஏறி "நீ என்பது ஓர் எழுத்து நான் என்பது இரண்டு எழுத்து நம்மாழ்வாரின் நட்பு மூன்றெழுத்து..."எனப் பேசத் தொடங்கினேன், அதற்கு எல்லாருமே கை தட்டினாங்க, அதுக்கு அப்புறமாக ஒரு பாட்டுப் பாடுவோம் என்று எடுத்தேன், அப்போ அந்த படத்தோட ஹீரோ வந்து டைம் ஆகுது லைட்டுக்கள் ஆப் பண்ணுங்க எல்லாரும் போவம் அப்படி என்றார்,

மேலும் தான் பேசும்போது யாருமே தன்னை கீழே இறங்குமாறு கத்தவில்லை எனவும், ஆனால் கத்தியது போன்று வீடியோக்கள் வெளியாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நான் பேசும் போது மீடியாக்காரங்களும், கொஞ்ச மக்களும் கீழே இருந்தாங்க எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து கவிதை கோபால் பேசுகையில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் பற்றியும் கூறியுள்ளார். அதாவது "மாஸ்டர் படத்தில் நான் நடிக்கும் போது விஜய் இருந்தார், ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது ஏனெனில் நன் அந்தளவிற்கு பெரிய ஆள் கிடையாது, இருப்பினும் லோகேஷ் கனகராஜிற்கு என்னை ரொம்ப நல்லாய் தெரியும்,  மாஸ்டர் படத்தில் லோகேஸ்ஜ் கனகராஜ் எனக்கு ஒரு வாய்ப்புக்க கொடுத்தாரு, அதாவது எனக்கு ஒரு டயலாக் கொடுத்தாங்க பேச சொல்லி கொடுத்தார், ஆனால் நான் வேணாம் என்று விட்டிற்று வந்திட்டேன், அந்த டயலொக் பேசி இருந்தால் என் வாழ்க்கையே வேற மாதிரி இருந்திருக்கும், 

அவர் பேச சொன்னது மஜாவா என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டும் தான், ஆனால் அந்த வார்த்தையை என்னால் பேச முடியல. எனக்கு அந்த வார்த்தை வரல, உடனே  "இந்த ஒரே ஒரு வார்த்தை உன்னால சொல்ல முடியாட்டில் நீ என்னத்தை சினிமாவில் பிடுங்கிடப் போறான்னு லோகேஷ் கனகராஜ் கேட்டார். அதற்கு நானும் எப்போவாது ஒரு நாள் நான் பிடுங்கிடுவேன் என்றேன்.


ஆனால் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணியதற்காக நான் ரொம்ப பீல் பண்ணியிருக்கேன், நான் பெங்களூரில் இருந்த சமயத்தில் விஜய் சார் மாதிரி ஒருத்தர் என்னைக் கால் பண்ணி கலாய்த்தார். நானும் விஜய் சார் என்று நினைச்சிட்டு அவரிட்டையே போயிற்றுக் கேட்டேன்,  நானும் ஆனால் பார்த்தால் கால் பண்ணிக் கலாய்ச்சது லோகேஷ் கனகராஜ். விஜய் சாரும் கண் அசைவில் லோகேஷ் கனகராஜ் தான் எனக் கூறிவிட்டு என்னை வெளியே அனுப்பினார்கள்" எனவும் தெரிவித்துள்ளார் கவிதை கோபால்.

Advertisement

Advertisement