நடிகர் விஜய் ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் தனது அரசியல் ஆசையையும் வளர்த்து வருகிறார். அந்தவகையில் சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயல்பாடுகள் கூடிய விரைவில் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி இருந்த விஷயமானது அவரின் அரசியல் பயணத்துக்கான தொடக்கப்புள்ளியாக பலராலும் பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமட்டுமல்லாது சமீபத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூரில் திடீர் சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது மற்றோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணிக் கூட்டம் பனையூரில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மறுநாள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி கேரள மாநில ரசிகர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Listen News!