தமிழ் திரையுலகப் பயணத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் லீடு ரோலில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை அனுகிருஷ்ணா. அந்தவகையில் முக்கியமாக விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு சிறு வயது தங்கையாக நடித்தவர் இவர் தான். அத்தோடு கத்தி படத்திலும் கிராமத்து கதாபாத்திரத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.
மேலும் இவர் ஹீரோயினாக நடித்த போயா வேலைய பாத்துக்கிட்டு, இளமி, சின்னஞ்சிறிய பறவை போன்ற படங்கள் நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெறுவதற்காக பலவாறு முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இந்த நிலையில் மற்றவர்களை போலவே இவரிடமும் பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்டபோது தன்னிடமும் நிறைய பேர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்கள் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது "நான் அதற்கு வரவில்லை. சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வேற வேலையை பார்த்துக் கொண்டாவது என் வாழ்க்கையை ஓட்டி விடுவேன். அதனால் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட போது நான் மறுத்திருக்கிறேன்" என்று அப்பேட்டியில் ஓப்பனாக கூறினார் அனுகிருஷ்னா.
Listen News!