• Nov 14 2024

விஜய்யின் ரீல் தங்கை சரண்யாவின் மகளா இது...? அச்சு அசல் அவங்க அம்மா மாதிரியே இருக்காங்களே..! வெளியான க்யூட் வீடியோ...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சரண்யா மோகன். அதனைத் தொடர்ந்து பின்னர் 'யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடிக் குழு, அழகர் சாமியின் குதிரை, வேலாயுதம்' உட்படப் பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் நடித்திருக்கின்றார்.


இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வந்த இவர் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் ஆன அரவிந்த் கிருஷ்ணனை 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2016-ஆம் ஆண்டில் ஒரு மகன் பிறந்தான். அதனைத் தொடர்ந்து 2019 இல் மகள் ஒருவர் பிறந்தார்.




குடும்ப வாழ்க்கையில் இணைந்த பின்னர் இவர் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. எனினும் இவரும் இவரது கணவரும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அந்தவகையில் இவரின் கணவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகளின் அழகான வீடியோ ஒன்றினை பகிர்ந்திருக்கின்றார். அந்த வீடியோ ஆனது தற்போது வைரலாகி வருகின்றது. அதில் இவரது மகள் பார்ப்பதற்கு சரண்யாவை விட ரொம்ப அழகாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement