தமிழ் சினிமாவில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி.
இவர் சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பாலியல் வழக்கில் கைதுசெய்யக்கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதாவது சீமான் கட்டாயத்தின் பேரில் 7 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகை விஜயலட்சுமி புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சீமானிடம் விசாரணை நடத்த தேதி ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் 2,3 தடவை சம்மன் அனுப்பியும் சீமான் நேரில் ஆஜராகாது ஒவ்வொரு காரணங்களை கூறித் தவிர்த்து வந்தார். குறிப்பாக தன் மீது விஜயலட்சுமி நிறைய பொய் சொல்வதாகவும், 2010-க்கு பிறகு அவரிடம் நான் பேசியதே இல்லை என்றும் சீமான் கூறியிருந்தார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாக்காத வகையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்த புகார்களை திரும்ப பெற்று பெங்களூருக்குத் திரும்பினார். இதனைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி தற்போது தற்கொலை மிரட்டல் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் "இந்த விவகாரத்தை இப்படியே மன்னித்து விட்டுவிட்டால் ஒன்றுமில்லை. சீமான் மானநஷ்ட வழக்கு நடத்தினால் நான் என் அக்காவை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்வேன்" எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு தனது தற்கொலைக்கு யார் காரணம் என்றும் எழுதிவைத்துவிட்டு சென்றுவிடுவேன் எனவும் கூறியுள்ளார் நடிகை விஜயலட்சுமி.
சீமான் மானநஷ்ட வழக்கு நடத்தினால் நான் என் அக்காவை கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன் - விஜயலட்சுமி
அண்ணன் சீமான் வழக்கு நடத்துவதில் உறுதியாக உள்ளார்... வந்து அவதூறு பரப்பிவிட்டு போனால் அப்படியே விட்டுவிட முடியாது...
ஏதோ பணம் கொடுத்து சீமான் சமாதானம் ஆக்கிட்டார்னு… pic.twitter.com/UqdMou8l6h
Listen News!