தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட ஒருவர் என்றால் அது நடிகர் விஜய் தான். இவருக்குத் தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் ரசிகர்கள் உள்ளனர். வருடந்தோறும் இவரின் படங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளமோ ஏராளம்.
அந்தவகையில் இவரின் நடிப்பில் கடந்த வருடம் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் இப்படமானது எதிர்ப்பார்த்த அளவிற்குப் பெரியளவில் வரவேற்பினைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் விஜய் நடிப்பில் குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு திரைப்படம் வெளியாகி இருக்கின்றது.
இப்படத்திற்கு மக்கள் மத்தியிலிருந்து நாளுக்கு நாள் நல்ல விமர்சனங்கள் கிடைத்த வண்ணம் தான் இருக்கின்றன. இதனால் இப்படமானது வசூலிலும் மாஸ் காட்டி வருகின்றது. இவ்வாறாக படம் ஒருபக்கம் பயங்கர ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்க இப்படத்தில் நடித்த பிரபலங்களும் பல பேட்டிகளை அளித்த வண்ணம் இருக்கின்றனர்.
அவ்வாறான பேட்டிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக வலம் வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் இடம்பெற்ற ஒரு பேட்டியில் நடிகர் ஷ்யாம் விஜய்யின் டயட் பிளான் குறித்த ரகசியத்தைக் கூறியுள்ளார். அதாவது அதில் அவர் கூறுகையில் "காலையில பொங்கல் சாப்பிட்டேன் டா, இரண்டு பூரி, மதியம் சப்பாத்தி, சிக்கன், கொஞ்சம் சாதம், மாலையில் மூடு நல்லா இருந்தா சாதம், இல்லேன்னா சப்பாத்தி என்று விஜய் கூறுவார்" எனத் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் "இயல்பாக சாப்பிடும் சாப்பாடு அது. புரொடக்ஷன்க்கு என்ன உணவு வருதோ அதை தான் விஜய் சாப்பிடுவார் .நன்றாக சாப்பிட்டு ஓய்வு எடுத்தால் விஜய் அவர்கள் போல் இருக்கலாம், ஆனால் நாம் அதை செய்ய மாட்டோம்" எனவும் ஷ்யாம் பேசியுள்ளார்.
Listen News!