• Nov 15 2024

தந்தைக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து சொன்ன மகன்... மிரண்டு போன விஜய்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவினுடைய தளபதி என்றால் அது நம்ம விஜய் தான். இவரின் படத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களோ ஏராளம். அதுமட்டுமல்லாது விஜய் எந்தப் படத்தில் நடித்தாலும் அதற்கு அவரின் ரசிகர்கள் கட்டவுட் வைத்துப் பால் ஊற்றி பிரமாண்டமாக கொண்டாடுவது வழமை. 

அந்தவகையில் தற்போது இவர் தெலுங்கு சினிமா பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தினை தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைகின்றார்.

பொங்கல் ஸ்பெஷலாக தயாராகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை அதாவது டிசம்பர் 24-ஆம் தேதி படு பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் படு வேகமாக நடக்கின்றன. அந்தவகையில் இசையமைப்பாளர் தமனும் விழா நடக்கப்போகும் இடத்திற்கு சென்று பணிகளை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஜய் முன்னர் நடித்த படம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்தப்படம் வேறு எதுவுமில்லை 'நண்பன்' தான். இப்படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன் ஆகியோர் சில காட்சிகளில் தமது பேன்ட்டை கழற்றி தலைவா யூ ஆர் கிரேட் என கூறுவார்கள். 


அதேபோல் நண்பன் படத்தை பார்த்துவிட்டு விஜய்யின் மகனாகிய ஜேசன் விஜய் தனது அப்பாவை பார்த்து பேன்ட்டை கழற்றி 'தலைவா' எனக் கூறி வாழ்த்தினாராம். அதைப்பார்த்து விஜய் கொஞ்சம் மிரண்டு போனதாக கூறுகின்றனர்.

Advertisement

Advertisement