நடிகர் விஜய்யின் மகன் தற்போது குறும் படத்தை இயக்கி வருகிறார். விரைவில் வெள்ளித்திரையில் ஒரு இயக்குநராக அவர் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. ஆம், தெலுங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் உப்பெண்ணா.இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உப்பெண்ணா படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கீர்த்தி ஷெட்டியே தமிழ் ரீமேக்கிலும் நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.
\
ஏற்கனவே பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய படத்தில் விஜய் மகனை நடிக்க வைக்க வேண்டும் என விருப்பப்பட்டார். ஆனால், சஞ்சய் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என விஜய் கூறினார்.அதே போல் புதிதாக வந்துள்ள இப்படத்தின் வாய்ப்பையும் சஞ்சய் மறுப்பாரா அல்லது, ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!