• Sep 20 2024

தனது அப்பாவிற்காக ரசிகர்களிடம் கெஞ்சிய விஜய் மகன்- ஏன் திடீரென இப்படியொரு வேண்டு கோள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் 66வது படம் தான் வாரிசு.இப்படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி இயக்குகின்றார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். விஜய் படங்களுக்கே உரிய ஆக்ஷன், காமெடியுடன் குடும்ப சென்டிமெண்டை பிரதானமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகின்றது.

பொங்கல் ரிலீசை மையமாக வைத்து இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது விசாகப்பட்டினத்தில் சூட்டிங் நடைபெற்று வருகின்றது.மேலும்  இந்தப் படத்தின் சீன்கள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளன.

தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு இந்தப் படம் சூட்டிங் துவங்கப்பட்டதில் இருந்தே பெரிய பிரச்சினையை சந்தித்து வருகின்றது. படத்தின் காட்சிகள் பல அடுத்தடுத்து லீக்காகி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது.

சமீபத்தில் கூட மருத்துவமனையில் நடிகர் விஜய், பிரபு ஆகியோர் நடித்த காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ ஒன்று வெளியானது.

இதையடுத்து, அப்செட் ஆன இயக்குநர் வம்சி, படக்குழுவுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம் வீடியோ வெளியாவதை தடுக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று ராஷ்மிகாவும், விஜய்யும் இருப்பது போன்ற வீடியோ வெளியானது, இதனால், படக்குழவினர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். 


இவ்வாறுஇருக்கையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு படத்தின் புகைப்படம், வீடியோக்களை பகிர வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்பாவுக்காக விஜய்யின் மகன் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.




Advertisement

Advertisement