• Nov 19 2024

பிரபல நடிகருடன் விஜய்யின் மகன் எடுத்துக் கொண்ட புகைப்படம்... இதுவரை யாருமே பார்த்திடாத அந்தப் போட்டோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இதுவரை சுமார் 65 இற்கும் அதிகமான படங்கள் உருவாகி இருக்கின்றன. அந்தவகையில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது.


அதாவது வம்சி இயக்கத்தில் உருவான இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. இப்படத்துடன் இணைந்து அஜித்தின் 'துணிவு' படமும் வெளியாக இருப்பதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சினிமாவைத் தாண்டி விஜய்யின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் இவர் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.


இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியுடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.


மேலும் இது சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படமாகவே இருந்தாலும், தளபதி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு இருக்கின்றது.

Advertisement

Advertisement