• Sep 20 2024

மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த விஜய் பட இளம் இயக்குநர்- ரசிகர்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் அட்லி. இப்படத்தில் நயன்தாரா நஸ்ரியா ஆர்யா ஜெய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்தில் நடித்திருந்தனர். அத்தோடு இப்படம் வேற லெவலில் வெற்றியும் பெற்றது.

இதனை அடுத்து நடிகர் விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றதால் தொடர்ந்து விஜய்யை வைத்து பிகில் மற்றும் மெர்சல் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார்.


இதனை அடுத்து ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார் ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகின்றார்.


மேலும் அட்லி நடிகை ப்ரியாவைத் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் தற்பொழுது தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement