• Sep 21 2024

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியலில் கமிட்டான விஜய்டிவி சீரியல் நடிகை- இவர் மாயன் மனைவியாச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சில காலம் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் தான் அரண்மனை கிளி. இந்த சீரியல் கொரோனா பரவல் காலத்தில் இடை நிறுத்தப்பட்டது. அந்த வகையில் இந்த சீரியலில் ஜானு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் மோனிஷா .

மலையாள நடிகையான இவர் இந்த சீரியல் இடை நிறுத்தப் பட்ட பின்னர் ஷு தமிழில் ஒளிபரப்பான பூவே பூச் சூடவா சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த சீரியலும் தற்பொழுது முடிவடைந்து விட்டது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய்டிவிக்கு வந்த இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரச்சிதா நடித்து வந்த காரக்டரில் நடித்து வருகின்றார். இந்த சீரியலும் தற்பொழுது முடிவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள ‘பச்சக்கிளி’ சீரியலில் லீட் ரோலில் மோனிஷா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 4 முதல் இரவு 7.30 மணிக்கு இந்த சீரியல் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement