• Sep 20 2024

விஜய்டிவியின் முக்கிய சீரியலில் கமிட்டான கோகுலத்தில் சீதை தொடரின் கதாநாயகன்- அடடே இந்த நடிகரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக ரசிகர்களைக் கவரும் விதமாக ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் பல சூப்பர் ஹிட்டான சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.இவ்வாறு சீரியல்களை ஒளிபரப்புவதில் சன்டிவி, விஜய்டிவி, ஷு தமிழ் என்பன முக்கிய இடம் வகிக்கின்றன.

அந்த வகையில் ஷு தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கோகுலத்தில் சீதை. இந்த சீரியலில் கதாநாயகனாக நந்தா மாஸ்டர் என்பவர் நடித்து வருகின்றார். இவர் ஷு தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடன இயக்குநராக இருந்தவர் என்பதும் முக்கியமாகும்.

இருப்பினும் கோகுலத்தில் சீதை மூலம் பிரபல்யமான இவர் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்பதும் முக்கியமாகும். இந்த நிலையில் இவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இவர் விஜய்டிவியில் புதிதாக ஒளிபரப்பப்படவுள்ள கண்ணே கலைமானே என்னும் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement