• Nov 12 2024

'வலியுடன் வாழ முடியாது'.. முதல் கணவரை விவாகரத்து செய்த விக்ரமின் 'மஜா' பட நடிகை.. மாமியார் கொடுமை தான் காரணமா.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக மாறியவர் நடிகை அனு பிரபாகர். அந்தவகையில் தமிழில் இவர் லாரன்ஸ், குணாலுடன் இணைந்து 'அற்புதம்' படத்திலும், ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து 'அன்னை காளிகாம்பாள்' படத்திலும், விக்ரமுடன் இணைந்து 'மஜா' படத்திலும் நடித்திருந்தார்.


தொடர்ந்து பல மொழிகளிலும் நடித்து சினிமாவின் உச்சத்தில் இருந்த போது கன்னட நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ண குமாரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் இணைந்தார் அனு.  அவருடன் குறிப்பாக 12 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு கிருஷ்ண குமாரை விவாகரத்து செய்தார். 

இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு ரகு முகர்ஜி என்ற கன்னட நடிகரை திருமணம் செய்த அவருக்கு தற்போதுநந்தனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இடப்பெற்ற நேர்காணல் ஒன்றில் ஏன் முதல் கணவரை விவாகரத்து செய்தேன் என்பது குறித்து நடிகை அனு பிரபாகர் தெரிவித்துள்ளார். 


அதாவது "புகுந்த வீட்டில் ஜெயந்தியுடன் நான் நல்ல உறவை வளர்த்துக் கொண்டேன். ஒரு பெண்ணாக, ஒரு நடிகையாக, நான் அவரிடம் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். கல்யாணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்த வேண்டாம் என ஜெயந்தி சொன்னார். 

இதனால் திருமணமான ஒரே ஆண்டில் 9 படங்களில் நான் நடித்தேன். எப்போதும் கண்ணியமான ஆடைகள் அணியும் என்னை மாடர்ன் உடைகள் அணிய ஜெயந்தி பலவாறு வற்புறுத்தினார். என்னுடைய திருமண வாழ்க்கைக்குள் 3-ஆவது நபர் நுழைவதை நான் விரும்பவில்லை. இது ரொம்ப பெர்சனல் விஷயம்" என அனு கூறியுள்ளார். 


அதுமட்டுமல்லாது "என்னை பொறுத்தவரை  மனிதனுக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான். அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.வலியில் வாழக்கூடாது. உங்களின் மகிழ்ச்சி சாத்தியமற்றதாக தோன்றினால் வேதனையான முடிவுகளை எடுக்க வேண்டும். அதனால் தான்  நான் விவாகரத்து முடிவை எடுத்தேன்" எனவும் பல விடயங்களை அனு ஓபனாக தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement