கடந்த 3-ஆம் திகதி வெளியாகி மாஸ் ஹிட் கொடுக்கும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் மிரட்டலான நடிப்பில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் போன்றோரும் சூர்யா சிறப்புத்தோற்றத்திலும் கலக்கி உள்ளனர்.
இப்படத்தை இயக்குநர் லோகேஷ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். படத்திற்கான உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. விக்ரம் படம், உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக பிரமாண்டமாக ரிலீசானது.
திரைப்படம் வெளியாகி ஐந்தே நாட்களில் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் நன்கு நாட்களில் கேரளாவில் 20 கோடி வசூலித்துள்ளது . எப்படியும் 30 கோடி வசூலை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தில் மலையாளத்தில் பல வருடங்களாக தெரிந்த கமல் ஹாசனுடன் மலையாள நடிகரான பஹத் பாசில் இருப்பதுதான் இப்படியான வசூலுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- கையில் Glass உடன் தெறிக்க விடும் நடிகை ஆண்ரியா-தீயாப்பரவி வரும் போட்டோஸ்
- பல லட்சம் பெறுமதி மிக்க வாட்சை சூர்யாவுக்கு பரிசளித்த கமல்-செம சர்ப்ரைஸ் கிப்ட் தான்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!