• Sep 21 2024

விக்ரம் சென்சார் முடிந்தது- படம் இவ்வளவு நீளமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, பகவத் பாசில் என பல நட்சத்திர பாட்டாளமே நடித்துள்ளதோடு இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிரூத் இசையமைத்துள்ள இப்படமானது வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இத்திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் ரிலீஸ் விழா பிரம்மாண்டமாக நடந்தது.

இதையடுத்து படத்தின் ரிலீஸுக்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து இருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளிவந்து இருக்கிறது.

அத்தோடு இப் படம் 2 மணி நேரம் மற்றும் 53 நிமிடங்கள் ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement