• Sep 21 2024

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலித்து வரும் விக்ரம் பட நடிகை- அடடே இந்த பிரபலத்தை தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிகளவான கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை காயத்திரி. இவர் 18 வயசு என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், மாமனிதன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் அவரைப் பிரபல்யப்படுத்தியது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தான் எனலாம். இப்படத்தில் பகத் பாசிலின் மனைவியாக நடித்து அசத்தியிருந்தார்.


இந்நிலையில் காயத்ரி ஷங்கர், அரவிந்த் சா என்கிற ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலித்து வருவதாக சோசியல் மீடியா பக்கத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.மேலும் இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்து வருவதாக காயத்ரிக்கு நெருங்கிய ஒருவர் உறுதி படுத்தியுள்ளார்.


மேலும் காயத்திரி  அண்மையில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் ஷூட்டிங்கில் ஒரே ஒருத்தர் தான் பொண்ணு, மத்தவங்க எல்லாம் ஜென்ட்ஸா இருந்தா, ஒரு பாத்ரூம் அரேஞ்ச் பண்ணக் கூட மாட்டாங்க.. பெண்களுக்குத் தேவையான பிரைவேஸி மற்றும் சேஃப்டியை ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடுதல் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement