• Sep 21 2024

மலையாள நடிகர் மம்முட்டியின் படத்தில் முக்கிய வேடத்தில் கமிட்டாகியுள்ள விக்ரம் பட ஏஜண்ட் டீனா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்த கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முதல் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இத்திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்துள்ளது.

இப்படம் தமிழில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அத்தோடு இந்த படங்களில் நடித்த அனைவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும்.

அந்த வகையில் இந்த படத்தில் ஏஜண்ட் டீனா என்ற கேரக்டரில் அட்டகாசமாக நடித்தவர் நடிகை வசந்தி என்பது தெரிந்ததே.இவர் விக்ரம் படத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் விக்ரம் படத்தை அடுத்து மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கும் கிறிஸ்டோபர் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த படத்திலும் இவர் அதிரடி ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி நடிகை வசந்திக்கு தமிழில் மூன்று படங்களும் மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement