நடிகர் சத்யராஜ், 1954ம் ஆண்டு கோவையில் பிறந்தார். இவர் தனது சினிமா கெரியரில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். சத்யராஜ் நடிகனாவதை அவரது தாயார் விரும்பவில்லை, இருப்பினும் அவர் ஹீரோவாகும் கனவை கைவிடவில்லை.
22 வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த சத்யராஜ், கடந்த 1978-ம் ஆண்டு ‘சட்டம் என் கையில்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இவர் தென்னிந்திய படங்களில் மட்டுமின்றி பாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் என்கிற இந்தி படத்தில் சத்யராஜ் தமிழராகவே நடித்திருந்தார். சத்யராஜ் தனது கேரியரில் நெகட்டிவ் ரோல்களிலும் ஆக்ஷன், எமோஷன்ஸ், டிராமா மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இருப்பினும், பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த பின்னர் அவருக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது.60 வயதை கடந்தாலும் படங்களில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.
அதில் விக்ரம் 3 படத்தில் நடிக்கிறாங்களாமே எல்சியூவில் இருக்கிறீங்களாமே உண்மையா எனக் கேட்ட போது நான் விக்ரம் படத்திலேயே அந்த பெரிய விமானத்தின் ஹைட்டில் இருந்து விழுந்து செத்திட்டேனே அதுக்கு அப்பிறம் எப்பிடி விக்ரம் படத்தில் வர முடியும். இப்படியெல்லாம் சொல்லுறாங்ளே என கிண்டலடித்து சிரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!