• Sep 20 2024

ரூ.400 கோடியை கடந்து வசூல் வேட்டை நடத்தி வரும் விக்ரம் திரைப்படம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 இல் வெளியான திரைப்படம் விக்ரம்.

இந்தத் திரைப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியானது

இப்படத்தில், விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் கௌரவ தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தனர்.

எங்கு திரும்பினாலும் விக்ரம் படத்தை பற்றிய பேச்சுதான்.அத்தோடு விக்ரம் திரைப்படம் வெளியாகி மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் ஒரு வாரத்தில் 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து அதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 300 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

மேலும் இந்த நிலையில் தற்போது 404 கோடி ரூபாய் வசூல் செய்து 400 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் வெளியான மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக விக்ரம் படம் மாறி உள்ளது என்பதும் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை விக்ரம்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement