• Sep 20 2024

விக்ரம் இப்போ தான் செம ஜாலியாக இருக்கின்றார்- தங்கலான் படம் குறித்து இயக்குநர் கொடுத்த அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வருபவர் தான் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. இவர் தற்பொழுது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு  ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பதோடு  இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எப் குறித்த கதை என்று இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.


படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோ நடிக்கின்றனர்.சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது, இதனால் அவர் ஓய்வில் இருந்தார்.

அண்மையில் ஒரு பேட்டியில் பா.இரஞ்சித் பேசும்போது, தங்கலான் படத்தின் படப்பிடிப்பு வரும் 15-ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் இன்னும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் சியான் விக்ரம் தற்போது குணமடைந்து ஜாலியாக இருப்பதாகவும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement